Digital Lock

தனியா இருக்குற பெரியவங்களுக்கு இருக்குற மிகப்பெரிய பயம் (Fear) என்ன தெரியுமா?

“நடு ராத்திரி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டா, கதவு லாக் ஆகி இருந்தா என்ன பண்றது?”

“திடீர்னு நெஞ்சு வலி (Chest Pain) வந்தா, ஆம்புலன்ஸ் வர்ற வரைக்கும் தாங்குவோமா?”

சாதாரண அப்பார்ட்மெண்ட்ல இருந்தா, உதவி கிடைக்கிறது கஷ்டம். கதவை உடைச்சு உள்ள போறதுக்குள்ள லேட் ஆகிடும்.

ஆனா Golden Planet-ல நாங்க உங்க பாதுகாப்பை (Safety) நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போயிருக்கோம். இங்கே நாங்க ஃபாலோ பண்ற “No-Bolt Policy” (தாழ்ப்பாள் இல்லாத முறை) பத்தித் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

1. தாழ்ப்பாள் இல்லாத வீடுகள் (The No-Bolt Policy)

இது தான் நம்ம ப்ராஜெக்ட்டோட மிகப்பெரிய ஹைலைட். எங்க வீட்டுக்குள்ள தாழ்ப்பாள் (Bolt) கிடையாது.

ஏன் தெரியுமா? எமர்ஜென்சி நேரத்துல, அந்தத் தாழ்ப்பாள் தான் எமனாக மாறும்.

  • Digital Locks: மெயின் டோர் (Main Door) எல்லாமே டிஜிட்டல் லாக் தான். எமர்ஜென்சினு நீங்க பட்டனை அமுக்கினா, எங்க Command Center-ல இருந்து ஆட்கள் வந்து மாஸ்டர் கார்டு (Swipe Card) மூலமா கதவைத் திறந்து உள்ளே வந்துடுவாங்க. கதவை உடைக்கத் தேவையில்லை.
  • Toilet Safety: பாத்ரூம்ல பிரைவசிக்கு (Privacy) தாழ்ப்பாளுக்குப் பதிலா Chain Lock (சங்கிலி) மட்டும் தான் இருக்கும். ஒருவேளை நீங்க உள்ளே விழுந்துட்டா, வெளியில இருந்து கையை விட்டு, அந்த செயினை ஈஸியா கழட்டிட்டு உள்ளே வந்து உங்களைக் காப்பாத்த முடியும்.

பிரைவசியும் முக்கியம், உயிரும் முக்கியம்!

2. அந்த “கோல்டன் ஹவர்” (The Golden Hour – First 20 Mins)

டாக்டர்ஸ் என்ன சொல்றாங்கனா, ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் (Stroke) வந்தா, முதல் 20 நிமிஷம் தான் ரொம்ப முக்கியம். அதுக்கு பேரு “Golden Hour”.

சிட்டி டிராஃபிக்ல ஆம்புலன்ஸ் வர லேட் ஆகலாம். ஆனா இங்கே:

  • Mini-ICU On-Site: நம்ம கேம்பஸுக்குள்ளேயே ஒரு மினி ஐசியூ இருக்கு. ஸ்ட்ரோக் வந்தா உடனே அதைத் தடுக்கத் தேவையான இன்ஜெக்ஷன் போட்டு Stabilize பண்ணிடுவோம்.
  • ICU Ambulance: 24 மணி நேரமும் ஒரு ஆம்புலன்ஸ் நம்ம காம்பவுண்டுக்குள்ளேயே நிக்கும்.
  • Hospital Network: Chettinad Health City ஜஸ்ட் 10 நிமிஷத்துல போயிடலாம். அப்பல்லோவும் (Apollo) பக்கத்துல இருக்கு. நீங்க ஹாஸ்பிடல் போறதுக்கு முன்னாடியே உங்க மெடிக்கல் ஹிஸ்டரி அங்கே டிஜிட்டலா போயிடும். சோ, டாக்டர்ஸ் ரெடியா இருப்பாங்க.

3. Health in Hand (முழுமையான மெடிக்கல் ப்ரொஃபைல்)

நீங்க உள்ளே வரும்போதே உங்க உடம்பைப் பத்தி எங்களுக்குத் தெரிஞ்சிடும்.

  • Medical Profile: உங்களுக்கு என்ன அலர்ஜி இருக்கு? உங்க நரம்பு (Vein) சைஸ் என்ன? (அவசரத்துக்கு ஊசி போட இது முக்கியம்) – எல்லா டேட்டாவும் எங்க கைல இருக்கும்.
  • Fall Risk: நீங்க நடக்குறதை வச்சே (Gait Analysis), உங்களுக்குக் கீழே விழற சான்ஸ் இருக்கானு கணிச்சுச் சொல்வோம்.
  • Smart Watch: நீங்க ஒருவேளை கீழே விழுந்துட்டா, உங்க கைல இருக்குற ஸ்மார்ட் வாட்ச் உடனே Command Center-க்கு அலர்ட் (Alert) கொடுத்துடும். நீங்க போன் பண்ணக்கூடத் தேவையில்லை.

4. Active to Assisted Care

ஆரம்பத்துல நீங்க ஆரோக்கியமா இருக்கலாம். ஆனா போகப் போக உதவி தேவைப்படலாம்.

  • Daily Check-up: நர்ஸ் தினமும் வீட்டுக்கே வந்து BP, Sugar செக் பண்ணுவாங்க.
  • Post-Op Care: ஆபரேஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா, ட்ரெஸ்ஸிங் (Dressing) பண்றதுல இருந்து மருந்து கொடுக்கிறது வரைக்கும் நர்சஸ் பார்த்துப்பாங்க.
  • Palliative Support: படுத்த படுக்கையா ஆகிட்டா (Bedridden), அவங்களைக் கண்ணும் கருத்துமா பார்த்துக்க ஸ்பெஷல் டை-அப் (Tie-ups) வச்சிருக்கோம்.

Conclusion: நிம்மதியா தூங்குங்க!

மெடிக்கல் எமர்ஜென்சி பத்தி இனிமே பயப்பட வேண்டாம்.

உங்க தலைமாட்டிலேயே ஒரு எமர்ஜென்சி பட்டன் இருக்கு. வெளியில 24/7 டாக்டர்ஸ், நர்ஸ், ஆம்புலன்ஸ் ரெடியா இருக்காங்க.

GoldenPlanet-ல நீங்க பாதுகாப்பான கைகளில் இருக்கீங்க. (Safe Hands).

FAQs

Q1: எமர்ஜென்சி பட்டன் (Panic Button) எங்கெல்லாம் இருக்கு?

உங்க பெட்ரூம், பாத்ரூம், ஹால், டைனிங் ஏரியா – இப்படி எல்லா இடத்துலயும் இருக்கு. பாத்ரூம்ல கீழே விழுந்தா கூட உங்களால ரீச் பண்ற உயரத்துல வச்சிருக்கோம்.

Q2: ராத்திரி நேரத்துல டாக்டர் இருப்பாரா?

கண்டிப்பா. 24/7 பாராமெடிக்கல் டீம் மற்றும் டாக்டர் ஆன்-கால் (Doctor on Call) வசதி உண்டு. அவசரத்துக்கு உடனே வருவாங்க.

Q3: என் அப்பாவுக்கு என்ன ஆச்சுனு நான் வெளிநாட்டுல இருந்து தெரிஞ்சுக்கலாமா?

தாராளமா. அவங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கும்போது, டாக்டர்கிட்ட நீங்க வீடியோ கால் (Video Call) பேசலாம். அவங்க ஹெல்த் ரிப்போர்ட்ஸ் எல்லாம் உங்களுக்கு வாட்ஸ்அப் அல்லது ஆப் மூலமா அப்டேட் பண்ணுவோம்.

Related Blogs